தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்றத்தை ரூ.1,200 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடுகிறார் முதலமைச்சர்
விஜய் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சட்டமன்ற கட்டிடம் 1640-1664 காலகட்டத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 1652-க்கு பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியில் தலைநகரமாக திகழ்ந்ததாகவும், சுமார் 400 ஆண்டுகளாக நினைவுச் சின்னமாக விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், தேவையான வசதிகளுடன் 45 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமையலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.