கரூர் விவகாரம் தொடர்பாக சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்திலிருந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்குகிறது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. குழுவில் உள்ள நாமக்கல் எஸ்பி விமலா, சியாமளா தேவி, கரூர் எஸ்பி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.