நெல் கொள்முதலுக்கு 401 நிலையங்கள் திறப்பு - தமிழக அரசு

3385பார்த்தது
விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் புதிதாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2026-27 நிதியாண்டிற்காக உயர்த்தப்பட்ட புதிய விலையிலேயே கொள்முதல் நடைபெற்று வருகிறது. சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,750 என்றும் பொது ரகத்திற்கு ரூ.2,600 என்றும் நிர்ணயிக்கப்பட்ட இப்புதிய விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி