அமெரிக்காவில் சமூக வலைதளம் மூலம் பழகிய 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக 44 வயது பள்ளி ஊழியர் ஒருவர் தற்போது கைதாகியுள்ளார். கிரானிக் டெக்ஸ்ட் என்ற பெண், மான்ஸ்ஃபீல்டில் உள்ள ஸ்மித் உயர்நிலைப் பள்ளியில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 2022-ல் சிறுவனை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சிறுவனின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த பெற்றோர் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.