மதுரை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி 45 ஆண்டுகள் பழமையான பெரியார் தோரண நுழைவாயில் நேற்று (ஜூலை 18) நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாட்டுத்தாவணி நக்கீரர் ஆர்ச் அகற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த நுழைவாயிலும் இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.