அமெரிக்காவின் நியூயார்க்கில் 15 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 45 வயது ஆசிரியைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியபோது 8-ம் வகுப்பு மாணவனுடன் தவறான முறையில் பழகியதாக குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் இடையே சுமார் 25,000 மெசேஜ்கள் பரிமாறப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. 2024-ல் நடந்த சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆசிரியைக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.