வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் 30,000 பயனாளிகள் இதில் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும். பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். இதற்காக ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.