தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.