புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவேலி பாலத்தில் இரண்டு கண்டைனர் லாரிகளும் ஒரு காரும் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கண்டைனர் தீப்பிடித்து எரிந்ததில் கார் மற்றும் லாரில் இருந்தவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.