சீனாவின் சட்டவிரோத சுரங்கப் பணியில் ஈடுபட்ட 5 பேர் பலி

61பார்த்தது
சீனாவின் சட்டவிரோத சுரங்கப் பணியில் ஈடுபட்ட 5 பேர் பலி
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த சுரங்கப் பணியில் இன்று (மே.31) ஏற்பட்ட சரிவின் காரணமாக, குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும், ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட ஆறு பேரும் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஷான்சி மாகாணத்தில் நிகழ்ந்த உயிர்கொல்லி நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவத்திற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி