பிகார் மாநிலம் தானாபூரில் மத்திய அரசின் ‘இந்திரா அவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் முகமது பப்லு (35), மனைவி காதுன் (30), குழந்தைகள் ருசார் (12), முகமது சந்த் (10), சாந்தினி (2) ஆகிய 5 பேர் என தெரியவந்துள்ளது. இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.