கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

8255பார்த்தது
கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்முரு அருகே வேகமாகச் சென்ற காரின் டயர் வெடித்து, சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்கள் சல்லகெரேவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ராகவேந்திரா, பிரமோத், ருத்ரேஷ், சோமு மற்றும் மல்லிகார்ஜுனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து மொலகால்முரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி