சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த வினித்(26), அவரது தம்பி விக்னேஷ்(24), ஆகாஷ் (23), சீனிவாசன்(26), அருள்குமார் (26) ஆகிய 5 பேர், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான புகாரில், சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று (பிப்., 11) முடிவடைந்த நிலையில், 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.