அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.