உலகளாவிய ஊக்கமருந்து குற்றவாளிகள் பட்டியலில்
இந்தியா முதலிடத்தில் உள்ளதைத் தடுக்க, புதிய திருத்தப்பட்ட தேசிய ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஊக்கமருந்து பயன்படுத்துவதோ, விநியோகிப்பதோ குற்றமாகும். மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ஜூன் 18-க்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.