புதுச்சேரியில் 5 ஆண்டுகள் காங்கிரஸின் மோசமான ஆட்சியில் சீர்கேடு உச்சத்தில் இருந்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். காரைக்காலில் இன்று (பிப்.14) நடக்கும் பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், “மோசமான காங்கிரஸ் ஆட்சியாளர் நாராயணசாமி. ஊழல் நிரம்பியிருந்த நாராயணசாமி அரசு. 2021ல் நடந்த தேர்தலில் மக்கள் நமக்கு 44% ஆதரவை அளித்தனர். இம்முறை 60% வாக்குகளைப் பெற்று, 24 இடங்களுக்கும் மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும்” என்றார்.