திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (மார்ச் 28) வெளியிட்ட நிலையில், இன்று (மார்ச் 29) மாலை 6 மணிக்கு தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் வெளியிடவுள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில், இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “7 லட்சம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள், நெசவாளர்கள் வாழ்வு மேம்பாடு” உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.