ஊர்க்காவல் படையில் இணைந்த 50 திருநங்கையர்.. நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்

3833பார்த்தது
தமிழக காவல்துறையின் ஊர்க்காவல் படையில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 50 திருநங்கையர் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜன.13) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7 திருநங்கையருக்கு ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். இதன் மூலம் தமிழகத்தில் இனி போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பணிகளில் திருநங்கையரும் தங்களின் பங்களிப்பை வழங்க உள்ளனர். நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி