முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல மாவட்ட நிர்வாகிகளும் கட்சி மாற்றம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.