தமிழகத்தில் பல பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் மழையில் நனைந்து சுமார் 5000 நெல் மூட்டைகள் கடுமையாக சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சுமார் 10,000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்து இருக்கும் நிலையில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.