சேலம் அருகே 56 அடி உயர முருகன் கோயில் கும்பாபிஷேகம்

39பார்த்தது
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அணைமேடு ராஜமுருகன் கோயிலில், 56 அடி உயர முருகன் சிலை அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிலை நன்றாக இல்லை என அனைவராலும் கேலி செய்யப்பட்டது. பலர் எதிர்மறை கருத்துக்களால் விமர்சனம் செய்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் முகம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தாரமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி