இஸ்ரேலுக்கு பதிலடி தரும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் 560 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கும் வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும், பஹ்ரைன் தளம் ட்ரோன் தாக்குதலில் பெரும் சேதத்தை சந்தித்ததாகவும் ஈரானிய தளபதி அதில் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் போர் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானின் இந்த தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.