ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயிலில் 5ஆம் ஆண்டு குருபூஜை விழா

5879பார்த்தது
ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயிலில் 5ஆம் ஆண்டு குருபூஜை விழா
தஞ்சை ஒரத்தநாடு அருகே வடுவூர் எடமேலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயிலில் அருள்ஒளி சித்தர் டாக்டர் சக்கரபாணி சுவாமியின் 5ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி சுவாமி சித்தர் பீடம் சித்தர் சீனிவாசன் சுவாமிகள் வேத மந்திரங்கள் கூறி யாக பூஜைகளை நடத்தினார். மகாலிங்கேஸ்வரர் மற்றும் அருள் ஒளி சித்தர் சக்கரபாணி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி