சிதம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

14பார்த்தது
சிதம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பால்வார்த்துண்ணான் கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக சகோதரர்களான பாலகிருஷ்ணன் (44) மற்றும் ராமகிருஷ்ணன் (35) ஆகியோரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தந்தை, மகன்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி