தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக 6 கோடி S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பணியில் 68,467 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 2.37 லட்சம் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் இந்தப் பணிகள் மாநிலம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.