நாளை (அக்.20) நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 6.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். குறிப்பாக, அக்.17 அன்று 2.31 லட்சம் பேரும், 18 அன்று 2.56 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். பெருமளவிலான மக்கள் வெளியேற்றத்தால் சென்னை நகரின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.