தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள்.. அதிமுக புதிய முடிவு

0பார்த்தது
தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள்.. அதிமுக புதிய முடிவு
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தனது கட்சியின் 3-ம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட உள்ளார். இதில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி, கும்பகோணம், ஆத்தூர், விருத்தாசலம், பழனி, மற்றும் சிவகாசி ஆகியவற்றை தனி மாவட்டங்களாக அறிவிக்கும் முக்கிய வாக்குறுதி இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குறுதிகள் வெளியான நிலையில், இந்த தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி