கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர். 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்தபோதே மேற்கூரை இடிந்து மாணவர்களின் தலை மீது விழுந்ததால் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.