தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம்
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சேதமடைந்த வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.