பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்கள் மீட்பு

62பார்த்தது
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்கள் மீட்பு
தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்கள் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்றிரவு (பிப்., 04) மேல்பட்டிரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த விடுதியில் 6 பெண்களை 3 பெண் தரகர்கள் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து விடுதியின் மேலாளர் உள்ளிட்டோரை காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி