ஈரானிய நாணயம் ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. டிசம்பர் 28 அன்று 1 டாலருக்கு 1.42 மில்லியன் ரியால் என மதிப்பு சரிந்தது. பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், பெட்ரோல் விலை மாற்றம் காரணமாக மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில் வன்முறையில் சிக்கி 62 பேர் உயிரிழந்த நிலையில், 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.