தமிழகத்தில் தெருநாய் கடி சம்பவங்கள் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2025-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 6,23,426-ஆக உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறியதே இந்த பாதிப்பு அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.