முதலமைச்சர் விஜய்யை 65% பேர் நிராகரித்துள்ளனர் என்று
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 02) செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கல், நையாண்டி பேசி முதலமைச்சர் பதவிக்கான தகுதியை குறைத்துக் கொள்ளாதீர்கள். விஜய்யின் பேச்சில் முதிர்ச்சி இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஒரே தலைவர் என சொல்லாதீர்கள். உங்களை 35% மக்கள்தான் ஆதரித்துள்ளார்கள். ஆனால் 65% பேர் உங்களை வேண்டாம் என்று நிராகரித்துள்ளனர் என கூறியுள்ளார்.