தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 7 கல்லூரிகளில், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (B.V.Sc & A.H) மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 660 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீதமும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 100-க்கும் மேற்பட்ட இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு: https://adm.tanuvas.ac.in