மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபாஸின் கடற்கரைக்கு அருகே இன்று (ஜூலை.17) 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியதுடன், அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சால்வடாரில் கட்டிடங்களையும் குலுக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நிலநடுக்க மையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 300 கி.மீ (186 மைல்) சுற்றளவுக்குள் உள்ள கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரித்தது.