தமிழகத்தில் புதிதாக 7 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 100 இடங்கள் வீதம் பிஎஸ்சி நர்சிங் படிப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.