குஜராத்தில் கடந்த மே 11 அன்று மனைவியை காணவில்லை என நாடகமாடிவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் தன் மனைவியை ரூ.50,000-க்கு நண்பர்களுக்கு விற்றதும், அவர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், நகைகளை பறித்துக்கொண்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.