நடப்பு நிதியாண்டில் 7 ராக்கெட்டுகளை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், 2 புதிய செயற்கைக்கோள்கள் ஏவுவதற்கு தயாராக உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கட்டுமான பணியில் இருக்கும் குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் இந்த ஆண்டிற்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதால், ஸ்ரீஹரிகோட்டா மற்றும் குலசேகரப்பட்டினம் ஆகிய இரு ஏவுதளங்களும் மாறி மாறி பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.