உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 6 பவுன் நகைகளை இழந்த 70 வயது முதியவர்

13580பார்த்தது
உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 6 பவுன் நகைகளை இழந்த 70 வயது முதியவர்
சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் தனக்குத் தெரிந்த 38 வயது பூ வியாபாரி பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்த சமயத்தில், முதியவரின் கவனத்தைத் திசைதிருப்பி பீரோவிலிருந்த 6½ பவுன் நகைகளை அந்தப் பெண் திருடிச் சென்றுள்ளார். ஊர் திரும்பிய மகள் நகைகள் மாயமானதைக் கண்டு தந்தையிடம் விசாரிக்க, உண்மைகள் வெளிவந்தன. புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி