தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 17,348 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் நேற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாநிலத்தில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,653 ஆக உயர்ந்துள்ளது. காய்ச்சல் பரவல் எதிரொலியாகத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.