தாய்லாந்தின் 'டைகர் கிங்டம்' பூங்காவில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் 'கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக வேகமாக பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் அந்நாட்டின் சுற்றுலா துறை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்க பூங்கா நிர்வாகம் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.