கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண் ஒருவர், தனது 73 வயது கணவர் மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும், இதற்கு தனது மகன்கள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கோரியிருந்தார். 2வது திருமணத்திற்கு ஆதாரமில்லை என்பதால் 73 வயது முதியவர் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.