அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 75 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் இன்று (மே 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட கட்சிப்பதவியை சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் வழங்கியவர் இபிஎஸ். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். செம்மலை அதிமுகவிலிருந்து வெளியே போனதை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.