இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு 20 - 28. ஆன்லைன் மூலம் தகுதி தேர்வு மற்றும் தாய்மொழி தகுதித் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு https://www.iob.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.