லெபனானில்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஒரே வாரத்தில் 77 குழந்தைகள் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா (UNICEF) அதிர்ச்சி தெரிவித்துள்ளது. அங்கு நாள்தோறும் சராசரியாக 11 குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நா, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின்படி குழந்தைகளைப் பாதுகாக்க இந்தத் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.