பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி

7916பார்த்தது
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி (77) என்ற மூதாட்டி, 1968ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி, 254 மதிப்பெண்கள் எடுத்தார். 19 வயதில் திருமணமான நிலையில் படிப்பை தொடரமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூதாட்டிக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதைத்தொடர்ந்து, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அவர் தனித்தேர்வராக கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் (செப்.10) வெளியானது. அதில் ஸ்ரீதேவி, 1,200-க்கு 829 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி