தமிழ்நாடு அரசு 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராகவும், ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா காஞ்சிபுரம் ஆட்சியராகவும், மாலதி ஹெலன் செங்கல்பட்டு ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டனர். ரவிகுமார் கரூர் ஆட்சியராகவும், சந்திரசேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.