உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அடையாளம் தெரியாத 8 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் கண் தோண்டப்பட்ட நிலையில், இருப்பதால் இது நரபலியாகக் கூட இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் சடலம் அருகே பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் இருந்துள்ளன.