மதுரை மாவட்டத்தில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 81 வயது முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பாலமேடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி (81) என்பவர், 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அப்போது, சிறுமி கூச்சலிட்ட நிலையில், அவர் தப்பியோடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசாமியை கைது செய்யப்பட்டார்.