நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,605 முதல் ரூ.14,402 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.5,607 முதல் ரூ.12,842 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ.4,645 முதல் ரூ.27,699 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 800 மூட்டைகள் தொகை ரூ.64.23 லட்சத்திற்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.